
மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் தலைதூக்கியுள்ள நிலையில், மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தி வருகின்றது.
இந்நிலையில், மாநில சுகாதார துறை அமைச்சர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியா இன்று காணொலி வாயிலாக ஆலோசனை நடத்த உள்ளார். இக்கூட்டத்தில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அறிவுறுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.