தமிழ்நாடு பாஜக மூத்த தலைவரும், பாஜகவின் தேசிய செயலாளராகவும் பணியாற்றி வந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
தொடரும் நியமனங்கள்:
பாஜகவின் மூத்த தலைவர்கள் மாநிலங்களின் ஆளுநர்களாக தொடர்ந்து நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர். தமிழிசை சௌந்தர ராஜன், இல. கணேசன் ஆகியோரை தொடர்ந்து மீண்டும் பாஜக மூத்த தலைவர்கள் ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
ஜார்க்கண்ட் ஆளுநராக..:
அந்த வகையில் தற்போது தமிழ்நாடு மாநில பாஜக தலைவராக இருந்த சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக இருந்த ரமேஷ் பயாஸ் மகாராஷ்டிரா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை அடுத்து சி.பி.ராதாகிருஷ்ணன் ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக குடியரசு தலைவரால் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாற்றப்பட்ட கணேசன்:
மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த இல. கணேசன் நாகலாந்து மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவரும் தமிழ்நாட்டை சேர்ந்தவராவார்.
சி.பி. ராதாகிருஷ்ணன்:
தமிழ்நாட்டின் கோயம்புத்தூரைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் 1998 மற்றும் 1999 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று இரண்டு முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளார். மேலும் இவர் கயிறு வாரிய தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
-நப்பசலையார்
இதையும் படிக்க: அழுகையினால் வந்த சாதனை.... முயற்சி திருவினையாகும்!!!