பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா - நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஞ்சாப் முன்னாள் முதலமைச்சருக்கு கொரோனா - நலம் விசாரித்தார் பிரதமர் மோடி
Published on
Updated on
1 min read

பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்த செய்தியை அவரது மகன் சுக்பீர் சிங் பாதல் உறுதிப்படுத்தியுள்ளார். இந்தநிலையில் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் பிரகாஷ் சிங் பாதலுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் மோடி அவரது உடல் நலன் குறித்து விசாரித்துள்ளார்.

பிரகாஷ் சிங் பாதலுக்கு லேசான அறிகுறிகளே தென்படுவதாகவும், அவர் நலமுடன் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com