
நடப்பாண்டின் தடுப்பூசி செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை 45 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி ஜூன் 21ஆம் தேதி முதல் அனைத்து மாநிலங்களுக்கும் தடுப்பூசிகள் இலவசமாக வழங்கப்படும் என்றும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் அறிவித்துள்ளார்.
இதன் எதிரொலியாக நடப்பாண்டின் தடுப்பூசி செலவினங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கிய இந்த நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீட்டை 45 ஆயிரம் கோடியாக உயர்த்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது தடுப்பூசி செலவினங்களுக்கு 35 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் 45 ஆயிரம் கோடியாக உயர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. .