
தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி, சென்னை அண்ணா சாலையில் அவரது திருவுருவப் படத்திற்கு பாலகிருஷ்ணன் மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியாரின் சிந்தனைகள் சாதி வெறி சக்திகளுக்கு சமாதிக்கட்டும் சக்தியாக இருப்பதாக கூறினார். ஆனால், அவர் வழி வந்த திராவிட கட்சிகள் ஆட்சி அமைத்தும், தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகம் நடப்பதாக, பாலகிருஷ்ணன் வேதனை தெரிவித்தார்..
மேலும் தலித் மக்களுக்கு எதிராக கொடுமைகள் நடக்கின்ற மாநிலமாக தமிழகம் இருக்கிறது எனவும் பாலக்கிருஷ்ணன் சாடினார். தொடர்ந்து பேசிய அவர், திராவிட கட்சிகளின் ஆட்சியில் பெரியாரின் கொள்கைகள் படிப்படியாக கைவிடப்பட்டிருப்பதாகவும், பெரியாரின் கொள்கைகளை அமலாக்குவதற்கும், செயல்படுத்துவதற்கும் முன் வர வேண்டும் எனவும், அவர் அறிவுறுத்தியுள்ளார்.