ஊரடங்கு பரிதாபம்: கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலி!

ஊரடங்கு பரிதாபம்: கள்ளச்சாராயம் குடித்தவர்கள் பலி!
Published on: 
Updated on: 
1 min read

உத்தரபிரதேச மாநிலத்தில் கள்ளசாராயம் குடித்த 5 பேர் பரிதாபமாக பலியாகினர்.

அலிகார் அருகே, கள்ளச்சாராயம் குடித்ததில் 52 பேர் பலியான விவகாரம், மாநிலம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அலிகார் அருகே உள்ள ரோகெரா கிராமத்தில் செங்கல் சூளையில் வேலை செய்து வரும் தொழிலாளர்கள், ஒரு பாலத்தின் அடியில் கிடைத்த கள்ள சாராயத்தை குடித்துள்ளனர். கள்ளசாராயம் குடித்த சிறிது நேரத்தில் அனைவரும் மயங்கினர். இதையடுத்து மயங்கிய நிலையில் இருந்த அவர்களை அப்பகுதியினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

மொத்தம் 27 பேர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் 22 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com