கலவரத்தை தொடர்ந்து கான்பூரில் சட்டவிரோத கட்டடங்கள் இடிப்பு!!

உத்திரபிரதேச மாநிலம் கான்பூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டிடங்களை இடிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
கலவரத்தை தொடர்ந்து கான்பூரில் சட்டவிரோத கட்டடங்கள் இடிப்பு!!
Published on
Updated on
1 min read

நபிகள் நாயகம் குறித்து சர்ச்சைகுரிய வகையில் பேசிய நுபுர் சர்மாவை கைது செய்ய கோரி நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

இதில் உத்திர பிரதேசத்தில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது.

அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு போலீசார் குவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கான்பூரில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கட்டடங்களை அதிகாரிகள் இடித்து வருகின்றனர்.

அங்கு மத்திய ரிசர்வ படையை சேர்ந்த போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் போராட்டங்களில் ஈடுபடும் போது இதுபோன்ற கட்டட இடிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவது பாஜக ஆளும் மாநிலங்களில் வாடிக்கையாகிவிட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com