திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருப்பதி வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!
Published on
Updated on
1 min read

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முகக்கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை ஏற்படாமலிருக்க மத்திய அரசு, மாநில அரசுகளுக்கு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட8 மாநிலங்களில் கவலை அளிக்கும் வகையில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால் பல மாநிலங்களில் சுற்றுலாத்தலங்கள் கோவில்கள் மூடப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது தொற்று குறைந்துள்ளதால் அங்கு மீண்டும் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு முக கவசம் அணியாமல் வரும் பக்தர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் . கடந்த 28ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள் கூடுதலாக 3 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com