பணியிட மாறுதலால் டெல்லி செல்லும் டிஜிபி....மாலை மரியாதையுடன் வழி அனுப்பி வைத்த போலீசார்...!

புதுச்சேரியில் பணியாற்றி, பணியிட மாறுதலால் டெல்லிக்கு செல்லும் டிஜிபி ரன்வீர் கிருஷ்ணையாவிற்கு புதுச்சேரி நகர எல்லையில் பணியில் இருந்த போலீசார், மாலை அணிவித்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பணியிட மாறுதலால் டெல்லி செல்லும் டிஜிபி....மாலை மரியாதையுடன் வழி அனுப்பி வைத்த போலீசார்...!
Published on
Updated on
1 min read

புதுச்சேரியில் பணியாற்றி, பணியிட மாறுதலால் டெல்லிக்கு செல்லும் டிஜிபி ரன்வீர் கிருஷ்ணையாவிற்கு புதுச்சேரி நகர எல்லையில் பணியில் இருந்த போலீசார், மாலை அணிவித்து வழியனுப்பி வைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் டிஜிபி ஆக ரன்வீர் கிருஷ்ணையா பணியாற்றி வந்தார்.  இந்நிலையில் இவரை டெல்லிக்கு மாற்றம் செய்து, புதுச்சேரியின் புதிய டிஜிபியாக மனோஜ் குமார் லால் என்பவரை நியமித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து புதிய டிஜிபி மனோஜ்குமார் லால் பதவியேற்றுக்கொண்டார். மேலும்,  தனது பணியை ஒப்படைத்த டிஜிபி ரன்வீர் சிங் இன்று காலை டெல்லி புறப்பட்டார்.

இதனை அறிந்து புதுச்சேரி நகர்பகுதியில் பணியில் இருந்த அனைத்து போலீசாரும் நகரின் எல்லையான கிழக்கு கடற்கரை சாலையில் காமராஜர் மணி மண்டபம் அருகே வந்த டிஜிபி ரன்வீர் கிருஷ்ணையாவின் வாகனத்தை நிறுத்தி, அவருக்கு சால்வைகள் போர்த்தியும், மாலை அணிவித்தும் காவலர்கள் மற்றும் காவல் துறை உயரதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com