கர்நாடக முதலமைச்சர் பதவியில் இருந்து முதலமைச்சர் சித்தராமையா பதவி விளக்கப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், அடுத்து முதல்வராக துணை முதல்வர் டி. கே. சிவகுமார் ஆட்சியில் அமரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அடுத்த முதல்வராக யாரை தேர்வு செய்தாலும் முழு ஒத்துழைப்பு தருவதாக சித்தராமையா தெரிவித்துள்ளார். மேலும், சித்தராமையாவிற்கு அடுத்த முதல்வராக டி. கே. சிவகுமார் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆளுநரை சந்தித்து சித்தராமையா தனது ராஜினாமா கடிதத்தை வழங்கும் பட்சத்தில் நாளை டி. கே. சிவகுமார் பதவியேற்பார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “நான் முதலமைச்சருடன் இருந்தேன். ‘நான் ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன்’ என்று அவர் கூறினார். அவர் ஏன் ராஜினாமா செய்கிறார்? என்று நான் அவரிடம் கேள்வி கேட்கவில்லை. ‘நீங்கள் ஏன் தொடரக்கூடாது?’ என்று கூறி நாங்கள் அவரைச் சமாதானப்படுத்த முயன்றோம்,” என்று தேஷ்பாண்டே கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும், முதல்வர் சித்தராமையா தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக அமைச்சரவையிடம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், அவர் ஆளுநரைச் சந்திக்க நேரம் கோரவில்லை எனத் தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. மேலும், சித்தராமையா பதவி விலகும் பட்சத்தில் அவருக்கு தேசிய அளவிலான பொறுப்புகள் வழங்கக்கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், சித்தராமையா தனது ராஜினாமாவிற்கு முன்னதாக, கட்சித் தலைவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அவர்களுடன் 'காலை உணவு சந்திப்பு' ஒன்றை ஏற்பாடு செய்து அவர்களின் ஒத்துழைப்பிற்கு நன்றி தெரிவித்துள்ளார்.
2023 கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்ற பிறகு உருவான நுட்பமான அதிகாரப் பகிர்வு ஏற்பாட்டின் மீது இந்த நிகழ்வு மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது. மேலும், சித்தராமையா, சிவகுமார், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மூத்த தலைவர்களுக்கு இடையே நடைபெற்ற சந்திப்புகள், அந்தப் பேச்சுவார்த்தைகளை மீண்டும் தீவிரப்படுத்தியுள்ளன. கட்சி வட்டாரங்களை மேற்கோள் காட்டி வரும் செய்திகளின்படி, சித்தராமையாவுக்கு ஒரு “கௌரவமான ஆட்சி மாற்றத்தை” காங்கிரஸ் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.