"காங்கிரசின் துரோகத்தால் வேதனையடைந்த திமுக!" INDIA கூட்டணி ஆலோசனைக் கூட்டம் புறக்கணிப்பு - 'தவெக' இதில் இடம்பெறுகிறதா?

காங்கிரசின் இந்த துரோகத்தால் மிகுந்த வேதனை அடைந்திருப்பதாகவும், உணர்வுகளுக்கு, மதிப்பளிக்கும் வகையில் டெல்லியில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை.
DMK Congress split
DMK Congress splitDMK Congress split
Published on
Updated on
1 min read

இந்தியா கூட்டணி கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என திமுக தலைமை அறிவிப்பு. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய நிலையில் தற்போது இந்த செய்தி வெளிவந்துள்ளது.

டெல்லியில் வருகின்ற 8ம் தேதி நடைபெறவிருக்கின்ற இந்தியா கூட்டணியின் ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, SIR, ஒரே நாடு ஒரே தேர்தல் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயகத்திற்கு எதிரான சட்டங்களை எதிர்த்து, மக்களுக்கு நீதி கிடைக்கவேண்டி உருவாக்கப்பட்டதுதான் இந்தியா கூட்டணி. மேலும், இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டதில் இருந்து அதன் மைய சக்தியாக திமுக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக தோல்வியடைந்ததையடுத்து காங்கிரஸ் திமுக கூட்டணியில் இருந்து விலகியது. இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகத்துடன் இணைந்தது. இந்நிலையில் காங்கிரசின் செயலுக்கு திமுக தனது பக்கத்தில் இருந்து கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. காங்கிரசின் இந்த துரோகத்தால் மிகுந்த வேதனை அடைந்திருப்பதாகவும், தற்போது உணர்வுகளுக்கு, மதிப்பளிக்கும் வகையில் தற்போது வருகின்ற 8ம் தேதி டெல்லியில் நடைபெறவிருக்கும் கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்ற முடிவினை எடுத்துள்ளது திமுக தலைமை. மேலும், காங்கிரஸ் கலந்து கொள்ளும் கூட்டத்தில் கலந்துகொள்ளமாட்டோம் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், திமுக இந்திய கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ளத்தநிலையில் மற்ற கூட்டணி காட்சிகள் கலந்து கொள்ளும் பட்சத்தில் நாட்டின் நலன் மற்றும் மக்களின் நலன் சார்ந்த கூட்டணி கட்சிகளின் குரலுக்கு கட்டாயம் செவி மடுப்போம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும், திமுக விலகிய நிலையில் திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகள் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இதில் பங்கேற்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், விசிக தவெக-வில் இணைந்ததையடுத்து அவர்களும் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் தவெக இடம்பெறுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், தமிழ்நாட்டில் அதிமுக, பாஜக, தவெக இந்தியா கூட்டணியில் இடம்பெறாத நிலையில் இவர்கள் பங்கேற்பது குறித்த கேள்விகள் வெகுவாக எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com