தாய்யை சுட்டு கொன்று விட்டு ஆன்லைனில் ஆர்டர் பண்ணி சாப்பிட்ட மகன்.. அதிர்ச்சி சம்பவம்!!

லக்னோவில் PUBG விளையாட கூடாது என கூறிய தாய்யை மகன் சுட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் தாயின் சடலத்துடன் 2 நாட்கள் வசித்து வந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்யை சுட்டு கொன்று விட்டு ஆன்லைனில் ஆர்டர் பண்ணி சாப்பிட்ட மகன்.. அதிர்ச்சி சம்பவம்!!
Published on
Updated on
2 min read

உத்தரப்பிரேதச மாநிலம் லக்னோவை சேர்ந்த ராணுவ அதிகாரி ஒருவர், மேற்கு வங்கத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி, 16 வயதில் ஒரு மகன், 10 வயதில் ஒரு மகள் ஆகியோர் இருந்தனர்.

இவர்களின் தந்தை மேற்கு வங்கத்தில் பணிபுரிந்து வருவதால் மூவரும் லக்னோவில் தனியாக வசித்து வந்தனர். 16 வயது மகன் லக்னோவில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில், அந்த 16 வயது சிறுவன் PUBG விளையாட்டுக்கு அடிமையாகி தொடர்ந்து விளையாடி வந்துள்ளார். PUBG கேம்-மால் படிப்பில் நாட்டமில்லாமல் இருப்பதாக பள்ளி நிருவாகம் சிறுவனின் தாய்யை அழைத்து கண்டித்ததாக கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் அந்த சிறுவன் கடும் ஆத்திரத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு நள்ளிரவில் தாய்க்கு தெரியாமல் சிறுவன் PUBG விளையாடிக்கொண்டிருத்துள்ளான். இதனை அறிந்த தாய் சிறுவனிடம் இருந்து செல் போனை பறித்துள்ளார்.

இதில் கோபத்தின் உச்சிக்கு சென்ற சிறுவன், வீட்டில் இருந்த கை துப்பாக்கியை எடுத்து தாய் நோக்கி சுற்றுள்ளார். இதில் தாய் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். தாய் இறந்ததை அறிந்த சிறுவன்.. அவரின் உடலை ஒரு அறையில் வைத்து பூட்டியுள்ளார்.

இந்த சம்பவங்களை பார்த்து கொண்டிருந்த 10 வயது தங்கையை, இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என மிரட்டி இன்னொரு அறையில் வைத்து பூட்டியுள்ளார். பின்னர் நண்பர்களை வீட்டிற்கு வரவழைத்து இரவு உணவை ஆன்லைனில் ஆர்டர் செய்து சாப்பிட்டுவிட்டு நண்பர்களுடன் திரைப்படம் பார்த்துள்ளார்.

நண்பர்கள் சிறுவனிடம் தாய் எங்கே என கேட்டதற்கு, அவர் அத்தை வீட்டிற்கு சென்றதாக கூறியுள்ளார். பின்னர் 2 நாட்கள் கழித்து தாயின் உடலில் இருந்து துர்நாற்றம் வீசத்தொடங்கியுள்ளது. துர்நாற்றத்தை  தடுக்க அந்த சிறுவன் வீடு முழுவதும் வாசனை திரவியத்தை அடித்துள்ளார். இருப்பினும், துர்நாற்றம் அதிகம் வீசியதால் பக்கத்து வீட்டு காரர்கள் போலீசுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தாயின் உடலை கைப்பற்றினர். இது தொடர்பாக சிறுவனிடம் விசாரணை செய்ததில் இந்த திடுக்கிடும் சம்பவங்கள் வெளிவந்தது. வீட்டில் வசிப்பவர்கள் தனியாக இருப்பார்கள் என்பதால் அந்த ராணுவ அதிகாரி அவர்களின் பாதுகாப்புக்காக துப்பாக்கியை வீட்டில் வைத்திருந்தார். மேலும் தனது தாயை கொன்ற குற்றத்தை ஒப்புக்கொண்டார் அந்த சிறுவன். இதையடுத்து போலீசார் அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com