அடையாளம் தெரியாத நபர்களிடம் வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்: ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...

அடையாளம் தெரியாத நபர்களிடம் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் சுய விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம் என ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.
அடையாளம் தெரியாத நபர்களிடம் வங்கி விவரங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்:  ரிசர்வ் வங்கி எச்சரிக்கை...
Published on
Updated on
1 min read

 இதுதொடர்பாக ரிசர்வ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், வங்கி வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட சுய விவரங்களை புதுப்பிப்பதாக கூறி போலி அழைப்புகள் மூலம் வாடிக்கையாளர்களிடம் நடைபெறும் மோசடிகள் சமீப காலமாக அதிகரித்துவிட்டதாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வாடிக்கையாளர்களிடம் இருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்திருப்பதாகவும், இதனால் வாடிக்கையாளர்கள் வங்கிக் கணக்கு எண், இணைய தள வங்கி சேவை விவரங்கள், ஏ.டி.எம் கார்டு குறித்த தகவல்கள், பின் நம்பர், ஓடிபி, வங்கியிடம் இருந்து வரும் குறுஞ்செய்தி, மின்னஞ்சல் போன்ற எந்த ஒரு விவரத்தையும் அடையாளம் தெரியாத நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com