
‘பாலியல் வன்கொடுமையிலிருந்து இருந்து தப்பிக்க வீட்டிலேயே இருக்குமாறு பெண்களுக்கு அறிவுரை வழங்கும் விதமாக ஒட்டப்பட்ட குஜராத் போலீசாரின் விழிப்புணர்வு போஸ்டர்களால் மாநிலத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது.
காவல்துறை சமீப காலமாக வித்தியாச வித்தியாசமான அறிவுரைகளை மக்களுக்கு வழங்கி வருகுகின்றது, அதில் சில ரசிக்கும்படியாக இருந்தாலும் சில விஷயங்கள் சர்ச்சையை கிளப்பிவிட்டு விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வுதான் குஜராத்தில் நடந்துள்ளது. குஜராத்தின் ஆமதாபாத் போலீசார் சார்பில் நகரின் பல இடங்களில் விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட் டப்பட்டிருந்தன. அவற்றில் பெண்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் சில வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
அதாவது, 'நள்ளிரவு பார்ட்டிகளுக்கு செல்லாதீர்கள், நீங்கள் கற்பழிக்கவோ. கூட்டு பாலியல் பலாத்காரத் துக்கு ஆளாகவோ நேரிடும். உங்கள் நண்பர்களுடன் இருட்டான இடங்களுக்கு செல்லவேண்டாம்,
நகரின் பலஇடங்களிலும், சாலைகளின் மையப்பகுதிகளில் உள்ள தடுப்புச் சுவர்களிலும் ஒட்டப்பட்டிருந்த இந்த போஸ்டர்கள் மாநிலத்தில்பெரும் அதிர்ச்சியையும், சர்ச்சையையும் ஏற்படுத்தின. இதுதொடர்பாக பொதுமக்கள் மத்தியில் பெரும் கொந்த ளிப்பும் ஏற்பட்டது.எனவே அந்த போஸ்டர்கள் உடனடியாக கிழிக்கப் பட்டன.
எனினும் இந்த விவகாரத் தில் எதிர்க்கட்சிகள் மாநில அரசை கடுமையாக விமர்சித் தன. மாநிலத்தில் பெண்க ளின் பாதுகாப்பை இந்த போஸ்டர்கள் அம்பலப்ப டுத்தி இருப்பதாக ஆம் ஆத்மி கடுமையாக சாட்டியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து அந்த கட்சி அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது. ‘பெண்களின் அதிகாரம் குறித்து குஜராத் அரசு பேசி வருகிறது. ஆனால் கள நிலவரம் வேறாக உள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் 6,500-க்கும் அதிகமானபாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 36-க்கு மேற்பட்ட கூட்டு பாலியல் பலாத்கார சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 5-க்கும் மேற்பட்ட பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன’ என கூறியுள்ளது.
என்னதான் பெண்களுக்கு அதிகாரம் வேண்டும் என பாஜக அரசு மூச்சு முட்ட பேசினாலும், இதுதான் குஜராத் பெண்களின் நிலை. பேனாக்களை வீட்டிலே முடங்கியிருக்கும்படி முதல்வர் சொல்கிறாரா? எனவும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.
இந்த போஸ்டர் விவகாரத்திற்கு ஆமதாபாத் போலீசார் விளக்கம் அளித்து உள்ளனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீஸ் துணை கமிஷனர் நீதா தேசாய் பேசுகையில், ‘அந்த போஸ்டர்கள் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அது சாலை பாதுகாப்புக்கானதே தவிர, பெண்களின் பாதுகாப்புக்கானது அல்ல. ஆனால் அதில் இடம்பெற்றிருந்த வாசகங்கள் குறித்து போலீசாருக்கு தெரியாது’ என தெரிவித்தார்.