ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... மகிழ்ச்சியுடன் குவியும் சுற்றுலா பயணிகள்...

கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் ஜோக் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 
ஜோக் நீர்வீழ்ச்சியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்... மகிழ்ச்சியுடன் குவியும் சுற்றுலா பயணிகள்...
Published on
Updated on
1 min read
உலக புகழ்பெற்ற ஜோக் நீர்வீழ்ச்சி கர்நாடக மாநிலம் சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகாவில் அமைந்து உள்ளது. சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நீர்வீழ்ச்சிகளில், ஜோக் நீர்வீழ்ச்சி உலக அளவில் 13–வது இடத்தில் உள்ளது.
ஷராவதி ஆற்றில் இருந்து உருவாகும் இந்த நீர்வீழ்ச்சியில், சுமார் 293 அடி உயரத்தில் இருந்து தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் ஜோக் நீர்வீழ்ச்சி 4 கிளைகளாக பிரிந்து அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது.
பெரும் இரைச்சலுடனும் தண்ணீர் விழும் நீர்வீழ்ச்சிக்கு ‘ரோரா‘ என்றும், தண்ணீர் வேகமாக சீறிப்பாய்ந்து விழும் நீர் வீழ்ச்சிக்கு ‘ராக்கெட்‘ எனவும் பெயரிடப்பட்டு உள்ளது.
இந்த நீர்வீழ்ச்சியில் கடந்த சில தினங்களாக நீர்வரத்து குறைவாக இருந்தநிலையில் கர்நாடக மாநிலத்தில் சில தினங்களாக கனமழை பெய்து வருவதால் ஜோக்நீர்வீழ்ச்சியில் வெள்ளம் ஆர்ப்பரித்து ஓடுகிறது. இதனை காண சுற்றுலா பயணிகள் படையெடுக்கின்றனர்
logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com