ரயில், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்!

ரயில், விமான பயணிகளுக்கு இ-பதிவு கட்டாயம்!
Published on
Updated on
1 min read

விமானம் மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்வோர் இ-பதிவு கட்டாயம் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

தமிழகத்தில், முழு ஊரடங்கின் காரணமாக மாவட்டங்களுக்கு இடையிலும், மாவட்டத்திற்குள்ளும் மருத்துவ அவசரங்கள் மற்றும் இறப்பு, இறுதிச்சடங்கு ஆகியவற்றிற்காக தனிநபர்கள் செல்வதற்கு இ-பதிவு முறை அமலில் உள்ளது. அதேபோல், நோய்க் கட்டுப்பாட்டு பகுதியில் எவ்வித தளர்வுகளும் கிடையாது எனவும், கட்டுப்பாடுகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அரசு அறிவித்திருந்தது.

இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அமல்படுத்தப்பட்டு, இன்று வரையில் நீட்டிக்கப்பட்ட முழு ஊரடங்கை, வரும் ஜூன் 7ஆம் தேதி வரை மீண்டும் நீட்டித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த ஊரடங்கு காலத்தில் சில செயல்பாடுகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளும், சிலவற்றுக்கு தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில், இன்று முதல் வீடுகளில் இருந்து ரயில் மற்றும் விமான நிலையம் செல்வோரும், அங்கிருந்து மறுபடியும் வீடுகளுக்குச் செல்வோரும் கட்டாயம் இ-பதிவு பெற்றிருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. குறிப்பாக, பயணச்சீட்டு மற்றும் அடையாள அட்டையுடன் கூடிய இ-பதிவு கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com