நடிகர் சோனு சூட் நியமனத்தை திரும்ப பெற்றது இந்திய தேர்தல் ஆணையம்!  

பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக இருந்த நடிகர் சோனு சூட் நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. 
நடிகர் சோனு சூட் நியமனத்தை திரும்ப பெற்றது இந்திய தேர்தல் ஆணையம்!  
Published on: 
Updated on: 
1 min read

பஞ்சாப் மாநிலத்தின் அடையாள சின்னமாக இருந்த நடிகர் சோனு சூட் நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் திரும்ப பெற்றுள்ளது. 

ஜனவரி மாதம் 4ம் தேதி அன்று சோனு சூட்,அந்த பொறுப்பிலிருந்து விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில தலைமை தேர்தல் அதிகாரி கருணா ராஜீ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

நடிகர் சோனூ சூட் ,கொரோனா காலங்களில் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து மிக பிரபலமானவர்.இதனால் பல சமூக ஆர்வலர்கள் பலரும் இவரை கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் இந்திய தேர்தல் ஆணையம் இவரை பஞ்சாப் மாநிலத்தின் அடையாளமாக அறிவித்து அடையாளப்படுத்தியது. 

பஞ்சாப் மாநிலத்தில் இந்த ஆண்டு சட்டப்பேரவைத்தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி நடிகர் சோனு சூட் நியமனத்தை இந்திய தேர்தல் ஆணையம் திருப்ப பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com