கொடூர ’தாயை’ என்கவுண்டர் பண்ணுங்க... மக்கள் ஆவேசம்

கொடூர ’தாயை’  என்கவுண்டர் பண்ணுங்க... மக்கள் ஆவேசம்
Published on
Updated on
1 min read

ஆந்திராவில் கள்ளக்காதலுக்காக பெற்ற மகளை படுகொலை செய்த தாயை, உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும் என கூறி பொதுமக்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அப்பகுதியில் பதற்றம் நிலவியது. 

விசாகப்பட்டினத்தில் உள்ள மரிக்கவலச கிராமத்தை சேர்ந்த பெண் வரலட்சுமி, கணவனை பிரிந்து வாழும்  வரலட்சுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர ரெட்டி என்பவருக்கும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளகாதலாக மாறியுள்ளது. இதனிடையே சில நாட்களுக்கு முன்பு வரலட்சுமியிம் மகள் மர்மமான முறையில் மரணமடைந்து புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே சிறுமியின் மரணம் தொடர்பாக கிராம மக்களுக்கு சந்தேகம் எழுந்தது. கள்ளகாதலுக்கு சிறுமி இடையூராக இருப்பதாக நினைத்து தாய் வரலட்சுமி குழந்தையை கொலை செய்திருக்கலாம் என்று கருதிய கிராம மக்கள் இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

அதன்படி அங்கு வந்த போலீசார் வரலட்சுமியிடம் விசாரணை நடத்தி வாகனத்தில் ஏற்றி காவல்நிலையம் அழைத்து முயன்றனர். அப்போது வாகனத்தை மறித்த கிராம மக்கள் கள்ளக்காதலுக்காக மகளை படுகொலை செய்து வரலட்சுமி உடனடியாக என்கவுண்டர் செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் எங்களிடம் விட்டு விடுங்கள்.நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com