21ம் நூற்றாண்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஆற்றல் துறை.....

கா்நாடக மாநிலம் துமகூருவில் ஹெலிகாப்டா் உற்பத்தி தொழிற்சாலையை பிரதமா் மோடி இன்று திறந்து வைத்துள்ளார்.
21ம் நூற்றாண்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஆற்றல் துறை.....
Published on
Updated on
1 min read

இருபத்து ஒன்றாம் நூற்றாண்டில் உலகின் எதிர்காலத்தை தீர்மானிப்பதில் ஆற்றல் துறை மிகமுக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். 

கர்நாடகா தேர்தல்:

கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிரமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுக்கூட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்நிலையில் பிரதமா் மோடி இன்று கா்நாடகத்திற்கு வருகை புரிந்து, துமகூருவில் உள்ள நாட்டின் மிகப்பெரிய பசுமைகள ஹெலிகாப்டர் உற்பத்தி தொழிற்சாலையை திறந்து வைத்து பேசியுள்ளார்.  தொடர்ந்து, அங்கு 20 ஆண்டுகளில் 3 டன் முதல் 15 டன் எடை வரை ஆயிரம் ஹெலிகாப்டர்களை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

வலுவான இந்தியா:

கர்நாடக மாநிலம், தும்கூரில் ஹெச்ஏஎல் ஹெலிகாப்டர் தொழிற்சாலை உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகளை துவக்கி வைத்த பிரதமர் மோடி நிகழ்ச்சியில் உரையாற்றினார்.  அப்போது பேசிய அவர், ஆற்றல் உற்பத்தியின் ஆதாரத்தை தேடுவதிலும், ஆற்றல் பகிர்விலும் இந்தியா வலுவாக உள்ளதாக கூறியுள்ளார்.  

பெருமிதம்:

பெருந்தொற்று மற்றும் ரஷ்யா உக்ரைன் போரிடையே உலகளவில் இந்தியா பிரகாசமான இடத்தில் இருப்பதாக பெருமிதம் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com