இந்தியாவின் மிக பணக்கார குடும்பங்களில் ஒன்றான அம்பானி குடும்பத்தை சேர்ந்த அனில் அம்பானி யெஸ் வங்கியில் ரூ.3000 கோடி கடன் வாங்கி அதனைத் திரும்பக் கொடுக்காமல் மோசடி செய்ததாக அவர்களின் ரிலையன்ஸ் குரூப் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நாட்டின் gdp -ஐ உயர்த்துகிறோம், இங்குள்ள இளைஞர்களுக்கு வேலை பெற்று தருகிறோம் என நாட்டில் உள்ள வங்கிகளில் பொய்யான வாக்குறுதிகளை கூறி கடன் பெற்று, பின்னர் அந்த கடனை திருப்பி செலுத்தாமல் பிஸ்கட் கொடுப்பது இந்திய தொழிலதிபர்களுக்கு கைவந்த கலை. அந்த பட்டியலில் அம்பானி குடும்பம் தற்போது சிக்கியுள்ளது.
2017-19ம் ஆண்டுகளில் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஹோம் பைனான்ஸ் நிறுவனம் இக்கடனை வாங்கியது. கடன் வாங்குவதற்காக வங்கி அதிகாரிகளுக்கு ரிலையன்ஸ் அதிகாரிகள் லஞ்சம் கொடுத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இம்மோசடி தொடர்பாக சி.பி.ஐ. இரண்டு வழக்குகளைப் பதிவு செய்தது. இதையடுத்து கடந்த வாரம் அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் இம்மோசடி தொடர்பாக நாடு முழுவதும் ரெய்டு நடத்தியது. மும்பை, டெல்லி போன்ற இடங்களில் நடத்தப்பட்ட இந்த ரெய்டு 3 நாட்கள் நீடித்தது. இதில் அனில் அம்பானிக்கு சம்பந்தப்பட்ட 25 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதன் மூலம் அவர் மோசடியாளராக அறிவிக்க பட்டர்.
இந்த சோதனையில் அனில் அம்பானிக்கு எதிராகப் பல முக்கிய ஆவணங்கள் கிடைத்துள்ளது. விசாரணையில் யெஸ் வங்கி அதிகாரிகள், ரிலையன்ஸ் குரூப் நிர்வாகம் கடனுக்காகக் கொடுத்த ஆவணங்களை முழுமையாக ஆய்வு செய்யாமல், ஏற்கனவே கடன் இருக்கும் நிலையில் புதிய கடன் கொடுக்கப்பட்டுள்ளதும் அமபலமானது.
இதுகுறித்து அமலாக்கத் துறை கூறுகை யில், "லஞ்சம், பிணையற்ற கடன் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், யெஸ் வங்கியில் வாங்கிய ரூ.3,000 கோடி கடனை தொழிலதிபர் அனில் அம்பானி சட்டவிரோதமாக மடைமாற்றம் செய்து மோசடியில் ஈடுபட்ட தாக வழக்குப்பதிவு செய்யப் பட்டுள்ளது. ஆகஸ்ட் 5-ம் தேதி அனில் அம்பானி நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க சம்மன் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனில் அம்பானி குழுமத் தின் பல நிறுவனங்கள் ரூ.10,000 கோடிக்கும் அதிகமான நிதி முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.