ராஜஸ்தான் அமைச்சரவையில் இன்று விரிவாக்கம்... ஆளுனர் மாளிகையில் பதவி பிரமாணம்...

ராஜஸ்தான் அமைச்சரவை இன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நான்கு பேர் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர்.
ராஜஸ்தான் அமைச்சரவையில் இன்று விரிவாக்கம்... ஆளுனர் மாளிகையில் பதவி பிரமாணம்...
Published on
Updated on
1 min read

ராஜஸ்தானில், 2018 ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் வென்றது. இந்த வெற்றிக்கு, இளம் தலைவரான சச்சின் பைலட்டிற்கு முக்கியத்துவம் தரப்படாததால், கடந்தாண்டில் கட்சிக்கு எதிராக சச்சின் பைலட் போர்க்கொடி துாக்கினார். அவருக்கு, 18 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்தனர்.

சோனியா மற்றும் முன்னாள் தலைவர் ராகுல், பிரியங்கா ஆகியோர் பைலட்டிடம் பேசினர். அதையடுத்து அவர் சமாதானமடைந்தார். ஓராண்டாகியும், சச்சின் பைலட்டின் ஆதரவாளர்களுக்கு அமைச்சரவையில் வாய்ப்பு தரப்படவில்லை. இது தொடர்பாக கடந்த 11 ஆம் தேதி, முதலமைச்சர் அசோக் கெலாட் டெல்லி சென்று காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியாவை சந்தித்து பேசினார்.

இதையடுத்து இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதில் சச்சின் பைலட் ஆதரவாளர்கள் நான்கு பேர் அசோக்கெலாட் அமைச்சரவையில் இடம் பெறுகின்றனர். முன்னதாக அசோக் கெலாட் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திற்கு பின் புதிய அமைச்சர்கள் பட்டியலுடன் ஆளுனரை சந்தித்து பட்டியலை முதலமைச்சர் அசோக் கெலாட், வழங்கினார். இன்று ஆள்ளுனர் மாளிகையில் புதிய அமைச்சர்களுக்கு ஆளுனர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com