பயங்கரவாதத்திற்கு எதிரான முதல் சர்வதேச மாநாடு!!!

பயங்கரவாதத்திற்கு எதிரான முதல் சர்வதேச மாநாடு!!!

Published on

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்வதை எதிர்த்துப் போராடுவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க இரண்டு நாள் சர்வதேச அமைச்சர்கள் மாநாடு டெல்லியில் வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது.  இதில் 75 நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.  

உள்துறை அமைச்சகம் நவம்பர் 18-19 தேதிகளில் ”பயங்கரவாதத்திற்கு பணம் இல்லை” என்ற கருப்பொருளில் பயங்கரவாத நிதியுதவியை எதிர்த்துப் போராடுவதற்கான அமைச்சர்கள் மாநாட்டை நடத்துகிறது.  இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தேசிய தலைவர்கள் பங்கேற்கின்றனர். மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com