”முதலில் அவர்களது....” பாஜக குறித்த கேள்விக்கு பதிலளித்த அசோக் கெலாட்!!

”முதலில் அவர்களது....” பாஜக குறித்த கேள்விக்கு பதிலளித்த அசோக் கெலாட்!!
Published on
Updated on
1 min read

ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் ஜெய்ப்பூரில் ராஜீவ் காந்தி கிராமப்புற ஒலிம்பிக் போட்டிகளை தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர் சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த கெலாட் ”முதலில் அவர்களது கட்சியைப் பார்க்க வேண்டும். பாஜகவிலும் பல அணிகள் உருவாகி இருப்பது எனக்கு தெரியும். யார் என்ன செய்கிறார்கள் என்பது பற்றிய முழு அறிக்கை என்னிடம் உள்ளது.” என்று கெலாட் கூறியுள்ளார்.  

மேலும் “பாஜகவிலும் கோஷ்டி பூசல் ஆரம்பமாகிவிட்டது. ஆனால் அங்குள்ள உறுப்பினர்கள் மோடி மற்றும் அமித் ஷாவுக்கு பயப்படுகிறார்கள்.  எனவே அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.  விரைவில் உண்மை அனைவருக்கும் முன் வெளிவரும்.” என்று தெரிவித்துள்ளார்.

                                                                                                                                      -நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com