கபடி வீரர்களுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு...! இணையத்தில் வைரலான வீடியோ..!

உத்திரபிரதேசத்தில் கபடி வீரர்களுக்கு கழிவறையில் உணவு பரிமாறிய வீடியோ இணையத்தில் வைரல்..
கபடி வீரர்களுக்கு கழிவறையில் பரிமாறப்பட்ட உணவு...! இணையத்தில் வைரலான வீடியோ..!
Published on
Updated on
1 min read

உத்திரபிரதேச மாநிலம் சஹாரன்பூர் மாவட்டத்தில் உள்ள விளையாட்டு வளாகத்தில், கபடி விளையாட்டு வீரர்களுக்கு தயாரிக்கப்பட்ட பாதி சமைத்த உணவுகள் கழிவறையில் வைக்கப்பட்டு பரிமாறப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது. இது குறித்து புகார் எழுந்ததை அடுத்து, மாவட்ட விளையாட்டு அதிகாரி  சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 

மூன்று நாள் சப்-ஜூனியர் பெண் கபடி போட்டியின் முதல் நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அன்று, விளையாட்டு வீரர்களுக்கு பாதி சமைத்த உணவு வழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. மேலும் இடப்பற்றாக்குறை காரணமாக உணவுகள் கழிவறையில் வைக்கப்பட்டு வழங்கப்படுவதாக வீரர்களும் கூறினர். இதுகுறித்த விடியோவும் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், கழிவறைக்கு அருகில், ஒரு பேப்பரில் தரையில் பூரிக்கள் சிதறி கிடந்ததும், வீரர்களுக்கு அதுவே பரிமாறப்பட்டதும் பதிவாகி இருந்தது. இதற்கு பல தரப்பினரிடமிருந்தும் எதிர்ப்புகள் கிளம்பியது. இந்த நிலையில் தான் மாவட்ட விளையாட்டு அதிகாரி அனிமேஷ் சக்சேனாவை சஸ்பெண்ட் செய்து விளையாட்டு துறை கூடுதல் முதன்மை செயலாளர் நவநீத் ஷேகல் உத்தரவிட்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com