முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக் குறைவு - மருத்துவமனையில் அனுமதி

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக் குறைவு - டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதி
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உடல்நலக் குறைவு -  மருத்துவமனையில் அனுமதி
Published on
Updated on
1 min read

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

89 வயதாகும் மன்மோகன் சிங், காய்ச்சல் மற்றும் உடல் பலவீனம் காரணமாக எய்ம்சில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது உடல் நிலை சீராக இருப்பதாகவும், உடல் வழியாக திரவ மருந்துப் பொருட்கள் செலுத்தப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் துவக்கத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மன்மோகன் சிங், எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் தற்போது இரண்டாவது முறையாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com