கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை இன்று தொடக்கம்......!

கர்நாடகாவில் பெண்களுக்கான இலவச பேருந்து சேவை இன்று தொடக்கம்......!
Published on
Updated on
1 min read

கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் பெண்களுக்கான இலவச பயண திட்டத்தை முதலமைச்சர் சித்தராமையா இன்று தொடங்கி வைக்கிறார். கர்நாடகாவில் ஆட்சியமைத்துள்ள காங்கிரஸ், அரசு பேருந்துகளில் பெண்கள் இலவச பயணம் மேற்கொள்ளும் சக்தி திட்டம் ஜூன் 11-ந் தேதி முதல் தொடங்கப்படும் என்று அறிவித்தது. அதன்படி மாநிலம் முழுவதும் இன்றுமுதல் இந்த சேவை தொடங்கப்பட உள்ளது.  இந்நிலையில் பெங்களூருவில் நடைபெறும் கோலாகல விழாவில் முதலமைச்சர் சித்தராமையா திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். 

காங்கிரஸ் அரசு பெண்களுக்கு அறிவித்திருந்த இலவச பேருந்து திட்டத்தினை பற்றிய விபரங்கள் பின்வருமாறு :-

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் கூறிய  உத்தரவாதங்களில் சக்தி திட்டமும் ஒன்று. 
பெண்கள்  பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்வதற்கு கர்நாடக அரசு கொண்டுவந்த திட்டம் தான் சக்தி திட்டம். 

இந்த சக்தி திட்டம் கர்நாடகாவில் இயங்கும் சாதாரண அரசு பேருந்து சேவைகளில் மட்டுமே பொருந்தும். ஐராவத், ஐராவத் கிளப் கிளாஸ், ஐராவத் கோல்ட் கிளாஸ், அம்பாரி, அம்பாரி ட்ரீம் கிளாஸ், அம்பாரி உத்சவ், ஃப்ளை பஸ், வாயு வஜ்ரா, வஜ்ரா, ஏசி அல்லாத ஸ்லீப்பர், ராஜஹம்சா மற்றும் ஈவி பவர் பிளஸ் ஏசி பஸ்கள் இந்த திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. மாநிலத்திற்கு வெளியே செல்லும் பேருந்துகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது. KSRTC, NWKRTC மற்றும் KKRTC இன் சாதாரண மற்றும் விரைவு பேருந்துகளில் 50 சதவீத இடங்கள் ஆண்களுக்கு ஒதுக்கப்படும்.

ஜூன் 11ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகளில் இலவசப் பயணத்தைப் பெற, சக்தி ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்குமாறு பெண்களுக்கு கர்நாடக அரசு அறிவுறுத்தியுள்ளது. 'சக்தி' திட்டம் குறித்த வழிகாட்டுதல்களை அரசாங்கம் ஏற்கனவே வெளியிட்டுள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வாக்குறுதிகள். கர்நாடகாவின் போக்குவரத்துத் துறையின்படி, ஜூன் 11 முதல் sevasindhu.karnataka.gov.in மூலம் பெண்கள் சக்தி ஸ்மார்ட் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com