உச்ச நீதிமன்றத்தில், இலவச Wi-Fi !

உச்ச நீதிமன்றத்தில், இலவச Wi-Fi !
Published on
Updated on
1 min read

உச்ச நீதிமன்ற வளாகத்தில் இலவச Wi-Fi வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்துள்ளார். 
 
நீதி மன்றத்திற்கு வரும் வழக்கறிஞர்கள், காவலர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியாளர்கள் போன்றார் பயன்படுத்தும் வகையில், குறிப்பிட்ட சில இடங்களில் இலவசமாக Wi-Fi வழங்கவுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் அமர்வுகள் அமைந்துள்ள இடம், வழக்கறிஞர்கள் அமரும் இடம், காத்திருப்பு பகுதிகள், ஊடகங்களுக்கான இடம் மற்றும் உணவகம் ஆகிய இடங்களில் இன்று முதல் இலவச வைபை சேவை அறிமுகப்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் உச்சநீதிமன்றத்தை முழுக்க முழுக்க டிஜிட்டல் மையமாக மாற்றும் முடிவின் ஒரு பகுதியாக இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com