நாடாளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை பெண்கள் புதிய உச்சத்தை தொடுகின்றனர்  - பிரதமர் மோடி பெருமிதம்

நாடாளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை பெண்கள் புதிய உச்சத்தை தொடுகின்றனர் - பிரதமர் மோடி பெருமிதம்

இந்தியாவில் நாடாளுமன்றம் முதல் பஞ்சாயத்து வரை பெண்கள் புதிய உச்சத்தை தொட்டு வருவதாக பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
Published on

மன் கி பாத் என்ற மனதின் குரல் வானொலி நிகழ்ச்சி வாயிலாக பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் நாட்டு மக்களுடன் உரையாற்றி வருகிறார்.

அந்தவகையில் நடப்பாண்டின் 2-வது மாத இறுதியில் பேசிய அவர், தன்சானியாவை சேர்ந்த கிலி மற்றும் நீமா ஆகியோருக்கு இந்திய இசை மீது அதீத ஆர்வம் இருப்பதாகவும், அவர்கள் இந்திய இசையை ஊக்குவிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

அதுமட்டுமல்லாது நாட்டில் ஆயூர்வேதத்தை மேம்படுத்த அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். இந்தியாவின் பழம்பெரும் சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளில் விற்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், கடந்த 7 ஆண்டுகளில் 200-க்கும் மேற்பட்ட சிலைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும், தொன்மையான சிலைகளை மீட்டெடுப்பது நமது கடமை எனவும் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com