எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்....எதனால்?!

எல்லைப் பகுதியில் நிறுத்தப்பட்ட எரிபொருள் விநியோகம்....எதனால்?!
Published on
Updated on
1 min read

அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் சுமூகமாக செல்வதை உறுதிசெய்ய, அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் முடிந்தவரை போலீஸ் பாதுகாப்பு அளிக்க தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

துப்பாக்கிச் சூடு:

அஸ்ஸாம் - மேகாலயா எல்லையில் நடந்த வன்முறையில் வனக் காவலர் உட்பட 6 பேர் கொல்லப்பட்டனர். சட்டவிரோதமாக வெட்டப்பட்ட மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லாரியை அசாம் வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தேறியது.

பதற்றமான சூழல்:

அஸ்ஸாம்-மேகாலயா எல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து ஜெயின்டியா மலைப்பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவி வருகிறது.  இந்த சம்பவத்தை தொடர்ந்து மேகாலயா மாநிலத்தின் பதிவெண் கொண்ட வாகனங்கள் மட்டுமே மாநிலத்திற்குள் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளன.   

எரிபொருள் நிறுத்தம்:

இரு மாநில எல்லையில் சர்ச்சைக்குரிய பகுதியில் நடந்த இந்த வன்முறையால் அஸ்ஸாம் வாகனங்கள் மேகாலயாவுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்தியுள்ளன.  அதே நேரத்தில், அஸ்ஸாமில் இருந்து வரும் அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரிகள் மற்றும் எண்ணெய் டேங்கர்களுக்கு போலீஸ் பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை மேகாலயா அரசு செய்து வருகிறது.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com