கேடி பில்லா… காருக்குள் ஒளித்து வைக்கப்பட்ட தங்க பிஸ்கட்கள்….

மணிப்பூர் மாநிலம், இம்பாலில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 18 மணி நேரம் நடத்திய சோதனையில், 43 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்தனர்.
கேடி பில்லா… காருக்குள் ஒளித்து வைக்கப்பட்ட தங்க பிஸ்கட்கள்….
Published on
Updated on
1 min read

மணிப்பூர் மாநிலம், இம்பாலில், மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் 18 மணி நேரம் நடத்திய சோதனையில், 43 கிலோ தங்க பிஸ்கட்களை பறிமுதல் செய்தனர்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில், ரகசிய தகவல் அடிப்படையில் கார் ஒன்றை மறித்து மத்திய குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள், அந்த காரில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, அந்த காரில் தீவிரமாக, 18 மணி நேரம் சோதனை நடத்தியதில், 3 இடங்களில் 43 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தங்கத்தை மறைத்து வைத்து கடத்துவதற்கு ஏதுவாக, அந்த காரில் மாற்றங்கள் செய்யப்பட்டது அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது. பறிமுதல் செய்யப்பட்ட தங்க பிஸ்கட்களின் மதிப்பு ரூ.21 கோடி என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com