2 டோஸ் போட்டுக் கொண்டால் அனுமதி... மகாராஷ்டிர அரசு புதிய அறிவிப்பு...

2 டோஸ் போட்டுக் கொண்டால் அனுமதி... மகாராஷ்டிர அரசு புதிய அறிவிப்பு...

2 டோஸ் போட்டுக் கொண்டால் புறநகர் மின் ரயில்களில் பயணிக்க அனுமதி...
Published on

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்கள், மும்பை புறநகர் மின்சார ரயில்களில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் பயணிக்கலாம் என அம்மநில அரசு அறிவித்துள்ளது.

இதேபோல் புனே மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு 8 மணி வரை கடைகளை திறக்கவும் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இரவு 10 மணி வரை உணவகங்களை இயக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மக்களின் வசதிக்கேற்ப சில தளர்வுகள் அறிவிக்கப்படுவதாகவும் எனவே மக்கள் கொரோனா விதிகளை முறையாக பின்பற்றி 3 ஆம் அலை வராமல் தடுக்க ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் உத்தவ்தாக்கரே  கேட்டுக் கொண்டுள்ளார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com