"சில நொடிகளில் நான் இறந்திருக்கலாம்" - கார் இடித்து சென்ற சம்பவத்தில் பெண் கூறுவது என்ன?

சியாவின் நண்பர் பதிவு செய்த வீடியோவில், அவர் காரைத் துரத்திச் சென்று, காரில் இருந்தவர்களிடம் தன்னை மோதியது குறித்து கேள்வி கேட்க முயன்றபோது, அந்தக் காரை ஓட்டுநர் திருப்பிக்கொண்டு சென்றது பதிவாகியுள்ளது.
"சில நொடிகளில் நான் இறந்திருக்கலாம்" - கார் இடித்து சென்ற சம்பவத்தில் பெண் கூறுவது என்ன?
"சில நொடிகளில் நான் இறந்திருக்கலாம்" - கார் இடித்து சென்ற சம்பவத்தில் பெண் கூறுவது என்ன?
Published on
Updated on
2 min read

ஹரியானா மாநிலம், குருகிராமில் பெண் ஒருவர் பைக் ஓட்டிச் சென்றுகொண்டிருந்தபோது, பின்னால் வந்த கார் ஒன்று அவர் மீது மோதி தள்ளிவிட்டுச் சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.

இதுகுறித்து சியா என்ற அந்தப் பெண் வெளியிட்ட வீடியோவில், “இன்று குருகிராம் சாலைகளில் நான் பாதுகாப்பற்றதாக உணர்ந்தேன். இப்படிப்பட்டவர்கள் மக்களை மோதிவிட்டு செல்வதற்கு அஞ்சுவதில்லை” எனப் பேசியிருந்தார்.

அதில், கடந்த ஞாயிற்றுக்கிழமை குருகிராமின் வசதியான கோல்ஃப் கோர்ஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, செடான் காரில் வந்த சில ஆண்கள் தனது பைக்கர் குழுவைப் பின்தொடர்ந்து வந்து ஆக்ரோஷமாக நடந்துகொண்டதாகக் கூறியுள்ளார். அவர்கள் பைக்கை நிறுத்துமாறு சைகை செய்ததாகவும், தங்களை அச்சுறுத்தும் வகையில் வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அவரது நண்பர் மற்றொரு பைக்கில் வந்து அவரைக் காப்பாற்ற முயன்றதாகவும், இறுதியில் அந்தக் கார் தன் மீது மோதி தள்ளிவிட்டுச் சென்றதாகவும் கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக இரண்டு வீடியோக்கள் வெளியாகியுள்ளன. சியாவின் வீடியோவில், அந்தக் கார் அவரைப் பின்தொடர்ந்து வந்து, சாலையின் 3-வது பாதையில் (lane) இருந்து திடீரென மாறி வந்து அவர் மீது மோதி தள்ளிவிட்டுச் சென்றது தெரிகிறது.

சியாவின் நண்பர் பதிவு செய்த வீடியோவில், அவர் காரைத் துரத்திச் சென்று, காரில் இருந்தவர்களிடம் தன்னை மோதியது குறித்து கேள்வி கேட்க முயன்றபோது, அந்தக் காரை ஓட்டுநர் திருப்பிக்கொண்டு சென்றது பதிவாகியுள்ளது.

குருகிராம் காவல்துறை இச்சம்பவத்தைத் தாமாக முன்வந்து வழக்காகப் பதிவு செய்து (suo motu cognisance), அடையாளம் தெரியாத நபர் மீது எஃப்.ஐ.ஆர். (FIR) பதிவு செய்துள்ளது. காரை ஓட்டிச் சென்றது கல்யாண் பைன்ஸ்லா என்ற நபர் எனத் தெரியவந்துள்ளது.

இந்தக் குற்றச்சாட்டைத் தொடர்ந்து, கல்யாண் பைன்ஸ்லாவின் வழக்கறிஞர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், பைக்கர்களால் தினமும் சாலையில் விபத்துகள் ஏற்படுவதாகவும், அவர்கள் சாலையில் செல்வோரைத் தொந்தரவு செய்வதாகவும் பொதுவாகக் குற்றம்சாட்டினார்.

பின்னர் நடந்த விபத்தில் கல்யாண் பைன்ஸ்லாவின் தவறு இல்லை என்றும், பைக்கில் வந்த பெண் வலதுபுறமாகச் செல்லும்போது, கார் இடதுபுறமாகச் செல்ல முயன்றதால் விபத்து ஏற்பட்டதாகவும், கும்பல் தாக்குதலுக்கு ஆளாகக்கூடும் என்ற அச்சத்தால் அவர் காரை நிறுத்தவில்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும், “அந்தப் பெண்ணின் வீடியோவைப் பாருங்கள், சமூக ஊடகங்களில் பாருங்கள். அந்தப் பெண் பைக்கை மணிக்கு 140-170 கி.மீ. வேகத்தில் ஓட்டுகிறார். இந்தச் சாலை ஸ்டண்ட்களுக்கானது அல்ல; இந்தச் சாலை வேகத்திற்கானதும் அல்ல. சர்ச்சையை ஏற்படுத்துவதற்காக இந்த வீடியோ பரப்பப்படுகிறது. லைக்ஸுக்காகவும் ஃபாலோவர்களுக்காகவும் அந்தப் பெண் இதைப் பதிவிட்டுள்ளார்” எனப் பாதிக்கப்பட்ட பெண்ணையே அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இத்துடன், கல்யாண் பைன்ஸ்லா, இரண்டு பைக் ஓட்டுநர்கள் தனது காரை மீண்டும் மீண்டும் முந்திச் சென்று, காருக்கு முன்னால் வேகத்தைக் குறைத்து தன்னைத் தொந்தரவு செய்ததாகவும், மோட்டார் சைக்கிளில் ஒரு பெண் ஓட்டிச் செல்வது தனக்குத் தெரியாது என்றும் கூறியிருந்தார்.

இதற்குப் பதிலளித்த சியா, “எனக்குப் பின்னால் இருந்த முடியை (கொண்டை) வைத்தே நான் பெண் என்பதை அறிய முடியும். நாங்கள் வேகத்தை அதிகரித்தும் குறைத்தும் சென்றிருந்தாலும், எங்களைப் பின்தொடர்ந்து வருவதற்கான உரிமையை அவருக்கு அளித்தது யார்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், “என்ன நடந்தது என்பதை உறுதிப்படுத்த இரண்டு வீடியோக்களே போதுமானவை. முதலாவது வீடியோவில், பைக் ஓட்டுநர்கள் மீது மோதிவிட்டு தப்பியோடும் முன்பு, கார் முதல் லேனில் இருந்து நேரடியாக மூன்றாவது லேனை நோக்கிச் செல்வது காட்டப்படுகிறது. இரண்டாவது வீடியோவில், கார் முதல் லேனில் இருந்து மூன்றாவது லேனுக்குச் சென்று மோதியது பதிவாகியுள்ளது.

சில வினாடிகளில் எனக்கு எலும்பு முறிவோ, மரணமோ கூட ஏற்பட்டிருக்கலாம். என்னை மோதியவர்கள், தாங்கள் மோதிய நபர் உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பதைப் பார்க்க ஒரு வினாடிகூட நிறுத்தவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

இத்துடன் சியா அதிகாரப்பூர்வமாக FIR பதிவு செய்வதாகவும், இப்போதைக்கு எந்த ஊடகங்களுக்கும் நேர்காணல் அளிக்கப் போவது இல்லை என்றும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் சியா ஒரு பெண் என்பதானாலேயே காரில் வந்த ஆண் இடித்து தள்ள முயற்சித்திருக்கிறார் எனப் பலரும் கூறி வருகின்றனர். குருகிராம் பெண்களுக்கு பாதுகாப்பான ஊராக இல்லை என சமூக வலைத்தள பயனர்கள் சாடியுள்ளனர்.

"சில நொடிகளில் நான் இறந்திருக்கலாம்" - கார் இடித்து சென்ற சம்பவத்தில் பெண் கூறுவது என்ன?
அஜித்துக்கு ரேஸ் கார் பரிசளித்த விஜய்.. “எனது அன்பான சகோதரருக்கு” - நெகிழ வைத்த பரிசு!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com