

உத்திர பிரதேஷ் , பிரதாப்கரில் உள்ள பிரயாக்ராஜ்-லக்னோ ரயில் பாதையில் கனமழையின் போது ஆட்டு மந்தை ஒன்று அதிவிரைவு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. ரயில் பாதையைக் கடந்து சென்ற ஆடுகளை ஓட்டி வந்த பெண்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். ரயில் தண்டவாளத்தை சீரமைத்த பிறகு, ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
மழையின் போது மூன்று பெண்கள் ஆட்டு மந்தையுடன் ரயில் பாதையைக் கடந்து கொண்டிருந்தபோது, லக்னோவிலிருந்து பிரயாக்ராஜ் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் வந்த ரயில் பாதையில் வந்த்து கொண்டிருந்தது. ரயில் வருவதைக் கண்ட கேட் கீப்பர், பெண்களை ரயில் பாதையிலிருந்து விலகிச் செல்லுமாறு சத்தமிட்டார். அந்த பெண்கள் ஆடுகளை தண்டவாளங்களில் இருந்து இறங்க ஓரத்தில் நின்று ஆடுகளை ஓட்ட நினத்து விரட்டினர். ஆனால் ஆட்டு மந்தையால் சரியான நேரத்தில் தண்டவாளத்தை விட்டு நகர முடியவில்லை. ரயில் மோதியதில் சுமார் 30 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன. ஆடுகளை ஒட்டி வந்த 3 பெண்களும் மயிரிழையில் உயிர் தப்பினர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட கால்நடை உரிமையாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குப் போதுமான நிதியுதவி வழங்குமாறு உள்ளூர்வாசிகள் ரயில்வே நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், விபத்துக்களை தடுப்பதற்காக, ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் கால்நடைகளை ஓட்டிச் செல்லும்போது, முக்கிந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஹத்திகாவன் காவல் நிலையப் பகுதியில் உள்ள, பிரயாக்ராஜ் - லக்னோ ரயில் பாதையில் 17C என்ற ரயில்வே கேட் அருகே மழையின் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. ரயில் பாதையில் ஆட்டுமந்தையை ஓட்டி சென்ற மூன்று பெண்கள் சற்று சுதாரித்ததில் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர். ஆனால் அவர்கள் ஒட்டி வந்த ஆடுகளில் சுமார் 30 ஆடுகள் உயிரிழந்தன. சம்பவம் குறித்த தகவல் கிடைத்ததும், ரயில்வே பாதுகாப்புப் படை (RPF) வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். ரயில் தண்டவாளத்தை ஆய்வு செய்தனர்.
இந்த விபத்தில் ஆடுகளை இழந்த இரு கால்நடை உரிமையாளர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், ரயில் தண்டவாளங்களுக்கு அருகில் தங்களது கால்நடைகளை நகர்த்தும்போது மக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்