
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில் இந்தியாவுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் அதிகரித்துள்ளது. ஆப்கன் வெற்றியை தொடர்ந்து காஷ்மீரை கைப்பற்ற தாலிபான்கள் முயற்சிக்க கூடும் என கூறப்படுகிறது. அதனை நிரூபிக்கும் வகையில் காஷ்மீர் இஸ்லாமியர்களுக்காக குரல் கொடுக்க தங்களுக்கு உரிமை உண்டு என தாலிபான்கள் அறிவித்துள்ளனர். இந்த நிலையில் காஷ்மீரின் பாதுகாப்பு நிலைமை குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் முக்கிய ஆலோசனை நடத்தப்பட உள்ளது.