இந்தூர் சுடாமா நகரை சேர்ந்தவர் நரேந்திர விஷ்வைய்யாவின் மனைவியை பக்கத்து வீட்டினரின் வளர்ப்பு நாய் கடித்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அவர், தன்னிடம் இருந்த உரிமம் பெற்ற துப்பாக்கி மூலம் நாயை கழுத்தில் சுட்டுக்கொன்றுள்ளார்.
இதுகுறித்த புகாரின் விஷ்வைய்யாவை கைது செய்த போலீசார், உரிய பிரிவின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
முன்னதாக இந்த நாய், தனது மனைவியை மட்டுமல்லாது அக்கம்பக்கத்தினர் சிலரையும் கடித்துள்ளதாக விஷ்வய்யா புகார் கூறியதால், அதுகுறித்தும் விசாரணை நடத்தி, உரிமையாளரை கைது செய்ய திட்டமிட்டுள்ளனர்.