சமூக வலைதளங்களில் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீரர்கள், தொழிலதிபர்கள் உள்பட கோடிக்கணக்கான மக்கள் தங்கள் பெயரில் கணக்குகள் வைத்துள்ளனர். அத்தகைய பிரபலங்களின் கணக்குகளில் இருந்து புகைப்படங்களை எடுத்து, அவர்களின் பெயரில் போலியான கணக்குகளை துவங்கும் போக்கு பரவலாக காணப்படுகிறது. இது தெரியாமல் குறிப்பிட்ட பிரபலங்களின் சமூக வலைதள கணக்கு என தவறாக நினைத்து, அதை பலர் பின்தொடர்வதும் நடக்கிறது.