ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் சபாநாயகரை சந்திக்க திட்டம்!

டெல்லியில், காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழு, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையில் சபாநாயகரை சந்திக்க திட்டம்!
Published on: 
Updated on: 
1 min read

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதை தொடர்ந்து கடந்த 3 நாட்களாக அவர் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளித்தார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மீது, டெல்லி காவல்துறை அராஜக போக்கை கட்டவிழ்த்து விட்டது. நாட்டின் முன்னாள் அமைச்சர்கள் என்றும் பாராமல், காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் டெல்லி காவல்துறை அராஜகமாக நடந்துக் கொண்டது நாட்டு மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

இந்த தாக்குதலில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு விலா எலும்பில் முறிவும் ஏற்பட்டது. இந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களை டெல்லி காவல்துறை நடத்திய விதம் குறித்து விவாதிப்பதற்காக, காங்கிரஸ் நாடாளுமன்ற கட்சி அலுவலகத்தில் அக்கட்சி உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெறவுள்ளது. மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி தலைமையிலான குழு, சபாநாயகர் ஓம் பிர்லாவை சந்திக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com