
கர்நாடகத்தில், வலியை போக்குவதாக கூறி போலி சாமியார் ஒருவர் பக்தரை கோடரியால் வெட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பாகல்கோட் மாவட்டம், மெட்டாகுட் கிராமத்திலுள்ள காசிலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளாக பூசாரியாக பணியாற்றி வருபவர் ஜக்கப்பா. இவரின் வீட்டிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை வயிற்று வலியுடன் வந்த நபருக்கு சிகிச்சை அளிப்பதாக தரையில் படுக்க வைத்து கோடாரியால் ஓங்கி வயிற்று பகுதியை வெட்டியதில், கோடாரி வயிற்றுக்குள் சிக்கியதால் அதை சிரமப்பட்டு எடுக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதன் அடிப்படையில், சிகிச்சைக்காக வந்த நபரின் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லையென தெரிவித்த அப்பகுதி போலீசார், மூட நம்பிக்கை சட்டத்தின் கீழ் போலி சாமியாரை கைது செய்தனர்.