
நாடு முழுவதும் புதிதாக 16 ஆயிரத்து 156 பேருக்கு கொரோனா உறுதி ஆகியிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பற்றி தினசரி நிலவரங்களை வெளியிட்டு வரும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கடந்த 24 மணி நேரத்தில் 733 கொரோனா உயிரிழப்புகள் பதிவானதாக தெரிவித்துள்ளது. இதற்கு கேரளாவில் அதிகளவில் உயிரிழப்பு எண்ணிக்கை திருத்தம் செய்து பதிவிடப்பட்டதே காரணம் என கூறப்படுகிறது. இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 56 ஆயிரத்து 386 ஆக உயர்ந்துள்ளது. அதுதவிர தினசரி பாதிப்பும் நேற்றைவிட இன்று 20 புள்ளி 1 சதவீதம் அதிகரித்துள்ளது. இதனால் சிகிச்சையில் இருப்போரின் எண்ணிக்கையும் ஒரு லட்சத்து 60 ஆயிரத்து 989 ஆக உயர்ந்துள்ளது.
கேரளாவில் ஒரே நாளில் கொரோனா பாதிப்பு 9,445 ஆக அதிகரித்ததன் விளைவாக இந்த புதிய உச்சம் என கூறப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 49 லட்சத்து 9 ஆயிரத்து 254 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. தற்போது ஒட்டுமொத்தமாக தடுப்பூசி செலுத்தப்பட்ட எண்ணிக்கை 104 கோடியாக உயர்ந்துள்ளது.