
பிரதமர் மோடி தொடர்பான ஆவணப்பட எதிரொலியாக டெல்லியில் பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
2002ம் ஆண்டு நடைபெற்ற குஜராத் கலவரத்தில் அப்போதைய முதலமைச்சரான மோடியின் பங்கு உள்ளதாக கூறி பிபிசி வெளியிட்ட ஆவணப்படத்தை மத்திய அரசு தடை செய்தது.
தொடர்ந்து இத்தடையை நீக்கக் கோரி பல்வேறு முக்கிய பல்கலைக்கழகங்களில் போராட்டங்கள் நடைபெற்ற நிலையில், நாடாளுமன்றத்திலும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன.
இந்நிலையில், டெல்லியில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்ட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.