
கடந்த 7 - ஆம் தேதிடெல்லியில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி “தேர்தலுக்கு முன்னர் எப்போதும் கள நிலவரங்களை வைத்து கருத்து கணிப்பு நடைபெறும், அந்த வகையில் “நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் 16 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்ற எண்ணிக்கை கிடைத்தது. ஆனால், நாங்கள் 9 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றோம். 7 வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளில் நாங்கள் தோல்வி அடைந்தோம். இந்த தோல்வி குறித்து நாங்கள் ஆய்வு மேற்கொண்டோம்.
இந்த ஆய்வில், தேர்தல் ஆணையம் பாஜகவுடன் கூட்டு வைத்து மக்களின் வாக்குகளை திருடியிருப்பது தெரியவந்தது. 1. போலி வாக்காளர்கள், 2.போலி முகவரி, 3.ஒரே முகவரியில் அதிக வாக்காளர்கள், 4.தவறான புகைப்படங்கள், 5.படிவம் 6. தவறாக பயன்படுத்தப்படுவது என 5 விதமாக வாக்குகள் திருடப்பட்டுள்ளன.
கர்நாடகாவின் பெங்களூரு மத்திய மக்களவைத் தொகுதியில் , 1,00,250 வாக்குகள் திருடப்பட்டுள்ளது. என்னும் மிகப்பெரும் குற்றச்சாட்டி எழுப்பியிருந்தார். தேர்தல் ஆணையம் மோடியின் கைப்பாவையாக செயல்படுகிறது என பேசியிருந்தார்.
இதனை தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை எதிர்த்து நேற்று பாராளுமன்றத்திலிருந்து ஆணையம் நோக்கி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேரணியாக சென்றபோது தடுத்து நிறுத்தப்பட்டனர், அப்போது சாலையில் அமர்ந்து போராட துவங்கிய உடன் அவர்களை கைது செய்தனர் டெல்லி போலீசார்... மேலும் இந்த கைது நடவடிக்கையில் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, கனிமொழி, கே.சி வேணுகோபால் உள்ளிட்ட எம்.பி -கள் கைதாகி பின்னர் மீண்டும் விடுவிக்கப்பட்டனர்.
இந்த சூழலில் பீகாரில் முன்னெடுக்கப்பட்டுள்ள SIR என்று சொல்லப்படுகிற Special intense Revision என்கிற வாக்காளர் பட்டியல் திருத்தத்தை எதிர்த்தும் வாக்குகள் திருடப்படுவது குறித்தும் பதிலளிக்க கோரி இந்தியா கூட்டணி எம்.பி -கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். மேலும் 124 Not Out என்ற டி சர்ட் அணிந்து இந்த தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். நேற்று பேரணி இன்று போராட்டம் என தலைநகர் டெல்லியே பதற்றத்தில் உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.