”சூரிய, காற்று சக்தி மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி” பிரதமர் பெருமிதம் !

”சூரிய, காற்று சக்தி  மின் உற்பத்தியில் இந்தியா முன்னணி” பிரதமர் பெருமிதம் !
Published on
Updated on
1 min read

சூரிய சக்தி மற்றும் காற்று சக்திகள் மூலம் மின் உற்பத்தி செய்யும் முன்னணி நாடுகளில் இந்தியாவும் ஒன்று என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 

ஜி 20 உச்சி மாநாட்டையொட்டி நடைபெறும் எரிசக்தி, பசுமை ஆற்றல் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் காணொளி வாயிலாக பிரதமர் மோடி உரையாற்றினார். அப்போது,  2030 ஆம் ஆண்டுக்குள் புதை படிவமற்ற எரிபொருள் பயன்பாட்டை 50 சதவீதம் அளவுக்கு குறைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறினார்.

அனைவரையும் உள்ளடக்கிய நீடித்த நிலையான வளர்ச்சியே மத்திய அரசின் கொள்கை என்று கூறிய பிரதமர், கடந்த 9 ஆண்டுகளில் 19 கோடி குடும்பங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு மற்றும் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதிகளை அளித்துள்ளதாக தெரிவித்தார்.

எல்.இ.டி பல்புகளால் ஒவ்வொரு ஆண்டும் 4ஆயிரத்து 500 கோடிக்கும் கூடுதலான யூனிட் மின்சக்தி சேமிக்கப்படுவதாக கூறிய பிரதமர் மோடி, மொத்த பயன்பாட்டில்  20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல் பயன்பாட்டிற்கும், 2025 ஆம் ஆண்டில் நாடு முழுமைக்குமான பயன்பாட்டிற்குமான பணிகளை தொடங்கியுள்ளதாக கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com