7 ஆண்டுகளில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றிள்ளார் மோடி... புகழ்ந்து தள்ளும் அமித்ஷா

7 ஆண்டுகளில் தனது வலுவான தலைமையால் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக பிரதமர் நரேந்திர மோடி மாற்றியுள்ளார் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா புகழ்ந்து தள்ளியுள்ளார்.
7 ஆண்டுகளில் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றிள்ளார் மோடி... புகழ்ந்து தள்ளும் அமித்ஷா
Published on: 
Updated on: 
1 min read

இந்தியாவின் பிரதமராக மோடி பொறுப்பேற்று 7 ஆண்டுகள் நிறை வடைந்ததையொட்டி பாஜக சார்பில் நேற்று சேவை தினம் கொண்டாடப்பட்டது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று 2-வது அலை தீவிரமாக உள்ள நிலையில் பெரிய அளவில் கொண்டாட்டங்கள் நடைபெறவில்லை.

இந்நிலையில், மோடியின் தலைமையிலான மத்திய அரசு 7 சாதனை ஆண்டுகளை நிறைவு செய்ததற்காக, மோடிக்கு, உள்துறை அமைச்சர் அமித்ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்... வளர்ச்சி, பாதுகாப்பு, பொதுமக்கள் நலன் மற்றும் முக்கிய சீர்திருத்தங்களின் ஈடுஇணையற்ற ஒருங்கிணைப்பின் தனித்துவமான உதாரணத்தை மோடி அரசு அளித்துள்ளது.

இந்த 7 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி, தனது உறுதியான, முழுமையான நலத்திட்ட கொள்கைளால், நாட்டின் நலன்தான் மிக முக்கியம் என ஒரு புறமும், மறுபுறம் ஏழைகள், விவசாயிகள் மற்றும் பின்தங்கிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, தனது வலுவான தலைமையால் இந்தியாவை சக்திவாய்ந்த நாடாக மாற்றியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளாக, பிரதமர் நரேந்திர மோடியின் சேவை மற்றும் அர்ப்பணிப்பில் அசைக்க முடியாத நம்பிக்கையை நாட்டு மக்கள் தொடர்ந்து வெளிப்படுத்தினர். அதற்காக, நாட்டு மக்களுக்கு நான் தலை வணங்குகிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்கு தலைமையின் கீழ், நாம் அனைத்து சவால்களையும் வெல்வோம் மற்றும் இந்தியாவின் வளர்ச்சி பயணத்தை தடைகள் இன்றி தொடர்வோம் என்பதில் நான் உறுதியாக உள்ளேன் என உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com