
4:04 pm
மூன்று தீவிரவாதிகள் கொலை
சிந்தூர் ஆபரேஷன் மூலம் தீவிரவாத முகாமின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் “லஷ்கர் இ தொய்பா” அமைப்பை சேர்ந்த அப்துல் மாலிக், மோடாஸிர் உள்பட மூன்று தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
3:28 pm
ரஷ்யா மற்றும் சீனாவுடன் பேச்சுவார்த்தை
சிந்தூர தாக்குதலை பற்றி சீனா மற்றும் ரஷ்யா ஆகிய இரு நாட்டு பாதுகாப்பு ஆலோசகர்களுடன் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேச்சு வார்த்தை மேற்கொண்டுள்ளார்.
1:33 pm
ஸ்டாலின் மற்றும் எடப்பாடியின் கருத்து
இந்திய ராணுவம் நடத்திய, சிந்தூர் தாக்குதலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் தனது வலைதள பக்கத்தில் “பயங்கரவாதத்திற்கு எதிராக இந்திய ராணுவத்துடன் தமிழ்நாடு நிற்கிறது. நமது ராணுவத்துடன், நமது தேசத்திற்காக. தமிழ்நாடு உறுதியாக நிற்கிறது.” என பதிவிட்டு ராணுவத்திற்கு தமிழ்நாட்டின் ஒத்துழைப்பை தெரிவித்துள்ளார்.
இதே போல் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளரான எடப்பாடி பழனிசாமி சிந்தூர் குறித்து “பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் என்பது, நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகக் கொடுமையான, மனிதத்திற்கே எதிரான போர்.
பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை #OperationSindoor திடமாக நிரூபித்துள்ளது.
"நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்" என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து, "ஆபரேஷன் சிந்தூரை வெற்றிகரமாக முடித்த நம் இந்திய இராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது.
இத்தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. @narendramodi அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு CAIADMKOfficial சார்பில் வாழ்த்துகள்.
வாழ்க, வெல்க தாய்த் திருநாடு!” என பதிவிட்டு பயங்கரவாதத்திற்கு இந்திய அடிபணியாது என்ற கருத்தை தெரிவித்துள்ளார்
1:21 pm
விமானங்கள் ரத்து
சிந்தூர் எதிரொலியை (மே 10) தேதி வரை “air india” விமான போக்குவரத்துக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீநகர் விமான நிலையம் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது.
1:08 pm
அனைத்துக் கட்சி கூட்டம்
நாளை காலை 11 மணிக்கு அனைத்து கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க அரசு “பாகிஸ்தானுக்கு செல்லும் பயனர்களை தவிர்க்க வேண்டும்” என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
1:01 pm
குடியரசு தலைவரை சந்திக்கும் பிரதமர்
ஆபரேஷன் சிந்தூர் தொடர்பாக மத்திய அமைச்சர்களுக்கு மோடி விளக்கினார். மேலும் சிந்தூர் தாக்குதலை மேற்கொண்ட இந்தியாவின் முப்படைக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அடுத்ததாக குடியரசு தலைவரை சந்திக்க இருக்கிறார்.
12:54 pm
மசூத் அசார் குடும்பத்தினர் பலி
ராணுவத்தின் துல்லியமான தாக்குதலில், 2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதல் மற்றும் 2019 ஆம் ஆண்டு புல்வாமா தாக்குதலில் மூளையாக செயல்பட்ட முக்கிய தீவிரவாதியான “மசூத் அசார்” என்ற தீவிரவாதியின் குடும்பத்தினர் 14 பேர் பலியானதாக தகவல் கிடைத்துள்ளது.
12:48 pm
பதற்றத்தை தணிக்க ஒத்துழைப்பு
சிந்தூர் தாக்குதலை அடுத்து பாகிஸ்தானின் பாதுகாப்பு துறை அமைச்சர் கவாஜா ஆசிப். “இந்தியா தாக்குதலை பின்வாங்கினாள் பதற்றத்தை தணிக்க நாங்களும் ஒத்துழைக்கிறோம். எங்களை தாக்காத வரை நாங்களும் தாக்க மாட்டோம்” என்று கூறியுள்ளார்.
12: 15 pm
வெளிநாட்டு பயணம் ஒத்திவைப்பு
பாகிஸ்தானின் தீவிரவாத முகாம்கள் தகர்க்கப்பட்டத்தின், எதிரொலியாக ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் துணை ஜனாதிபதி ஆகிய மூவரையும் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டியும். அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த சொல்லியும் பாதுகாப்பு துறை மற்றும் உளவு துறை அறிவுறுத்தி இருக்கிறது.
11: 50 am
தமிழ் திரையுலகினரின் கருத்து
பாகிஸ்தானின் பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா நடத்தி வரும் “ஆபரேஷன் சிந்தூர்” தாக்குதலுக்கு தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது வலைதள பக்கத்தில் “போராளியின் போர் தொடங்குகிறது.நினைத்த பணி நிறைவேறும் வரை இதை நிறுத்த வேண்டாம். இந்த தாக்குதலில் ஒட்டுமொத்த இந்தியாவும் உங்களுடன் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.
அதே போல நடிகரும், தற்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் அவர்கள் தனது வலைதள பக்கத்தில் சிந்தூர் தாக்குதலை நடத்தியதற்கு “இந்திய ராணுவத்தின் பாதுகாப்பு நடவடிக்கைக்கு ராயல் சல்யூட்” என பதிவிட்டு தனது கருத்தை பகிர்ந்துள்ளார்.
நடிகரும் அமரன் படத்தின் கதாநாயகனுமான சிவகார்த்திகேயன் தனது வலைதள பக்கத்தில் “இது தான் இந்திய ராணுவத்தின் முகம் ஜெய் ஹிந்த்” என பதிவிட்டு தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் நடிகர் சரத் குமார் அவர்கள் “பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள் தலைமையின் கீழ் பயங்கரவாதத்துக்கு எதிரான இந்திய இராணுவத்தின் வெற்றிகரமான அதிரடி ஆபரேஷன்சிந்தூர் ஏவுகணை தாக்குதலால் பாகிஸ்தானின் 9 தீவிரவாத மையங்கள் அழிக்கப்பட்டிருப்பது இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும், வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்.
இரவு முழுவதும் நடந்த இந்த தாக்குதலை நமது பிரதமர் நேரடியாகக் கண்காணித்துள்ளார். உலகையே அச்சுறுத்தும் தீவிரவாதத்தை வேரறுக்கும் தாக்குதலாக, இது அமைய அனைவரும் மனதால் ஒருங்கிணைந்து தேசப்பற்றோடு நமது ராணுவத்தினருக்காகவும் அவர்களது குடும்பத்தினருக்காகவும் பிரார்த்தனை செய்ய வேண்டும்.
நமது இராணுவ வீரர்களுக்கு தலைவணங்கி, தமிழக மக்கள் இந்திய ஒருமைப்பாட்டுடன் இராணுவத்தினருக்கு உறுதுணையாக இருப்போம் என்பதை உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” என தனது கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்கொலை டிரோன்!
இந்திய இராணுவம், கடற்படை மற்றும் வான்படை ஆகியவை ஒருங்கிணைந்து நடத்திய இந்த தாக்குதலில் 100 -க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது.
இந்தியா முதல் முறையாக லொயிடரிங் முனிஷன்கள் (loitering munition) என சொல்லப்படும் தற்கொலை டிரோன்களை கொண்டு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
ஆளில்லாத இந்த வெடிக்கும் ட்ரோன்கள் துல்லிய வழிகாட்டியாக செயல்பட்டு இலக்கை அடையாளம் கண்டு, நேரடியாக அதில் மோதி தாக்குதலை உண்டாக்குகின்றன. இந்த அமைப்புகள் தன்னிச்சையாக செயல்படக்கூடியவையாகவும், மனிர்களால் கட்டுப்படுத்தப்படக்கூடியவையாகவும்இருக்கிறது.
இந்த தாக்குதல் குறித்து விளக்கம் அளித்த இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம், "சிந்தூர் ஆபரேஷனின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள ஜம்மு மற்றும் காஷ்மீர் -ன் சில பகுதியில் உள்ள ஒன்பது பயங்கரவாத முகாம்களை அழிக்க “லொயிடரிங் முனிஷன்களை பயன்படுத்தினோம். எங்கள் நடவடிக்கைகள் துல்லியமான, அளவிடப்பட்ட மற்றும் கச்சிதமான தாக்குதலாக இருந்தது. பாகிஸ்தானின் எந்த இராணுவ தளவாடங்களும் இலக்காகப்படவில்லை, தீவிரவாத முகாம்கள் மற்றும் மறைவிடங்கள் மட்டுமே தாக்கப்பட்டது" என்று கூறியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்