”காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமே...” பாஜகவின் கருத்துக்கு பதிலடி கொடுக்குமா காங்கிரஸ் ?!!!

”காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமே...” பாஜகவின் கருத்துக்கு பதிலடி கொடுக்குமா காங்கிரஸ் ?!!!
Published on
Updated on
1 min read

காங்கிரசையும் அதன் சித்தாந்தத்தையும் பங்களிப்பையும் யாரும் புறக்கணிக்க முடியாது.  காங்கிரஸ் இல்லாத இந்தியா சாத்தியமில்லை.

காங்கிரஸின் 138வது நிறுவன விழாவிற்கு புனேவின் மாநில காங்கிரஸ் அலுவலகத்தில் தலைமை தாங்கிய சரத் பவார் காங்கிரசையும் அதன் சித்தாந்தத்தையும் பங்களிப்பையும் யாரும் புறக்கணிக்க முடியாது எனக் கூறியுள்ளார்.  அதனோடு புனேயில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தின் வரலாற்றைக் குறிப்பிட்டு, மகாத்மா காந்தி, பண்டிட் ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி உள்ளிட்ட பல மூத்த தலைவர்கள் இங்கு வருகை புரிந்ததாகவும் தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று சிலர் கூறுகிறார்கள் எனவும் ஆனால் காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவது சாத்தியமில்லை எனவும் சரத் பவார் உறுதியாக கூறியுள்ளார்.  இந்தியாவில் காங்கிரஸின் பங்களிப்பையும் வரலாற்றையும் ஒருபோதும் புறக்கணிக்க முடியாது எனவும் இந்தியாவை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டுமானால், காங்கிரஸை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும் எனவும் கூறிய என்சிபி தலைவர், காங்கிரஸின் சித்தாந்தத்தை யாரும் புறக்கணிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.  

காங்கிரஸின் மூத்த தலைவர் பவார் மேலும் கூறுகையில்,  மகாராஷ்டிராவிலும் தேசிய அளவிலும் ஒரே மாதிரியான சித்தாந்தங்களைக் கொண்ட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய முடிவு செய்துள்ளன எனவும் பாஜகவின் முக்த் பாரத் சித்தாந்தத்தை எதிர்கொண்டு தோற்கடிக்க காங்கிரஸ் தொண்டர்களின் ஆதரவைப் பெறுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com