இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள்... 11பேரை சுற்றி வளைத்து கைது செய்த இந்திய கடற்படை!!

அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்ததாக 11 ஈரானியர்களை இந்திய கடற்படை கைது செய்துள்ளது. அவர்களிடம் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்
இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த ஈரானியர்கள்... 11பேரை சுற்றி வளைத்து கைது செய்த இந்திய கடற்படை!!
Published on
Updated on
1 min read

அந்தமான கடல் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான வகையில் சிறிய ரக கப்பல் ஒன்று உலவுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து அங்கு இந்திய கடற்படை விரைந்தது. இந்திரா பாயின்ட் பகுதியில் சுற்றித்திரிந்த சிறிய கப்பலை கடற்படை சுற்றி வளைத்தது. கப்பலுக்குள் இந்திய கடற்படை வீரர்கள் சோதனை செய்த போது அந்தக் கப்பலில் 11 ஈரானியர்கள் இருந்தது தெரியவந்தது.

கப்பல் முழுவதையும் அதிகாரிகள் சோதனையிட்டனர். தொடர்ந்து அந்தக் கப்பலையும் கப்பலில் இருந்த பதினோரு பேரையும் சென்னை துறைமுகத்துக்கு கடற்படையினர் அழைத்து வந்தனர். சென்னை துறைமுகத்தில் பதினோரு பேரையும் மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகரிகளிடம் கடற்படை அதிகாரிகள் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கப்பலில் போதைப்பொருட்களோ, வெடி பொருட்களோ இருக்கிறதா எனவும் அதிகாரிகள் சோதனையிட்டு வருகிறார்கள். மத்திய உளவுப் பிரிவு அதிகாரிகளும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். துறைமுகத்தை சுற்றி 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் துப்பாக்கியுடன் துறைமுகத்தை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com