"நவம்பர் 15 பழங்குடியினர் தினம்!"- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தை ஒட்டி, நாட்டின் 15வது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தனது உரை ஆற்றினார்.
"நவம்பர் 15 பழங்குடியினர் தினம்!"- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு!
Published on
Updated on
1 min read

உலகில் மிக வேகமாக வளரும் பொருளாதார நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்றும் புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் பார்த்து வருவதாகவும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு  தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி!

நாட்டின் 75வது சுதந்திர தின அமுதப் பெருவிழாவை யொட்டி, நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், இந்திய சுதந்திரம் ஜனநாயகத்தின் மிகப்பெரிய வெற்றி என தெரிவித்தார்.

உலகிற்கு உதவிய பெருமை!

ஜனநாயகத்தின் உண்மையான திறனைக் கண்டறிய உலகிற்கு உதவிய பெருமை இந்தியாவுக்கு உண்டு என்றும் ஜனநாயகம் இந்த மண்ணில் வேர்களை வளர்த்தது மட்டுமல்ல, வளப்படுத்தியது என்றும் திரவுபதி முர்மு பெருமிதத்துடன் கூறினார்.

பழங்குடியினர் தினம்!

தாழ்த்தப்பட்டவர்கள், ஏழைகள் மற்றும் விளிம்பு நிலையில் இருப்பவர்களுக்கும் கருணை என்பதே இந்தியாவிடம் இருக்கும் ஒரு மந்திரச் சொல் என்று குறிப்பிட்ட குடியரசுத் தலைவர், ஆண்டுதோறும் நவம்பர் 15ம் தேதி பழங்குடியினர் தினமாக கொண்டாடப்படும் என்ற அரசின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது என்றார்.

வளர்ந்து வரும் நாடு!

உலகில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடுகளில் இந்தியாவும் உள்ளதாக கூறிய அவர், புதிய இந்தியாவின் வளர்ச்சியை உலகம் பார்த்து வருவதாகவும் கூறினார்.

சுதந்திர தின வாழ்த்து!

காலனியாதிக்க ஆட்சியாளர்களிடம் இருந்து நம்மை நாம் விடுவித்துக் கொண்டு, நமது எதிர்காலத்தை நாமே வடிவமைத்துக் கொள்வது என்று தீர்மானித்த நாள் தான் இன்றய தினம் என்றும் இந்த நாளை நாம் கொண்டாடும் வேளையில், சுதந்திர இந்தியாவில் நாம் வாழ்வதைத் தங்களின் மகத்தான தியாகங்கள் மூலம் சாத்தியமாக்கிய அனைவருக்கும் தலைவணங்கி, சுதந்திர தினத்தை கொண்டாடுவோம் என்றும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com