
காத்மாண்டு நகரை தலைமையிடமாக கொண்ட யீட்டி ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம், பஜூரா மாவட்டத்தில் உள்ள கோல்டி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது விமானத்தின் பின்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நின்றது.
உடனடியாக விமானத்தில் இருந்த பயணிகள், விமான நிலைய ஊழியர்கள் என 20-க்கும் மேற்பட்டோர், விமானத்தை கைகளால் தள்ளி சென்றனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.