
ஆந்திரா மாநிலத்தில் உள்ள மலை கிராமங்களுக்கு ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் வகையில் சாலைகள் இல்லாத நிலையில், மலை கிராம மக்கள் வசதிக்காக ஆந்திர மாநில அரசு படுக்கை வசதியுடன்கூடிய பைக் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கியுள்ளது. பைக்குடன் பொருத்தப்பட்ட நோயாளி படுக்கும் வகையில் படுக்கை, ஆக்சிஜன் மற்றும் பிற அடிப்படை மருத்துவ வசதிகள் இதில் உள்ளன. இந்த ஆம்புலன்ஸ் சேவை தற்போது பார்வதிபுரம் மானியம், விஜயநகரம், அல்லூரி சீதாராம ராஜ் ஆகிய 3 மாவட்டங்களில் தொடங்கப்பட்டு உள்ளது.