
ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமிர்-அப்துல்லாஹியன், 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார். இந்தநிலையில் நேற்று பிரதமர் மோடியை சந்தித்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலான ஆலோசனைகளையும், தீவிரவாதம் ஒழிப்பு குறித்தும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
மேலும் இந்தியாவுக்கும் ஈரானுக்கும் இடையிலான பல நூற்றாண்டுகள் பழமையான நாகரீக தொடர்புகளை மேலும் மேம்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. முன்னதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்த ஹொசைன், பாஜக பிரமுகர்களின் நபிகள் பற்றிய சர்ச்சை கருத்து ஈரானில் எதிர்மறையான சூழலை ஏற்படுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.